ரஷ்யா கடற்படை தினத்தை சிறப்பித்த இந்திய கப்பல் - சிறப்பான வரவேற்பு!

Update: 2021-07-27 01:57 GMT

ரஷ்யக் கடற்படையின் 375வது கடற்படை தினமான இன்று ரஷ்யாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இந்தியா சார்பாக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் பங்கேற்று சிறப்பித்துள்ளது





ரஷ்ய கடற்படையின் 325-வது கடற்படை நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை ஜூலை 22‌ அன்று சென்றடைந்தது. இந்த கப்பலை ரஷ்ய கூட்டமைப்பிற்கான இந்திய தூதர் டி.பி.வெங்கடேஷ் வர்மா பார்வையிட்டார். அப்போது கப்பலின் தலைமை அதிகாரி அவருக்கு தற்போதைய பயணம் குறித்து எடுத்துரைத்தார். நமது கடல் பகுதிகளை காப்பதிலும், இந்திய-ரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்திய கடற்படை ஆற்றி வரும் பங்கை ரஷ்ய தூதர் வெகுவாக பாராட்டினார்.

ரஷ்ய கடற்படையின் பால்டிக் பிரிவின் துணை தளபதி, துணை அட்மிரல் செர்ஜெய் யெலிசெயேவ் ஜூலை 23ஆம் தேதி தபாரை பார்வையிட்டார். அப்போது அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான வலுவான நட்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நினைவிடத்தில் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி அஞ்சலி செலுத்தினார். 2021 ஜூலை 28 மற்றும் 29 அன்று நடைபெற இருக்கும் கூட்டுப் பயிற்சியிலும் இந்தியா சார்பாக இந்த கப்பல் பங்கேற்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Similar News