துர்கை சிலை கரைக்க அமைதியாக சென்ற ஊர்வலத்தின் மீது கார் மோதி பரபரப்பு - மத்தியபிரதேசத்தில் நடந்த அவலம்!

மத்திய பிரதேசத்தில் துர்க்கை சிலை கரைக்கும் ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து ஏற்படுத்தியதில் குழந்தை உட்பட இருவர் காயம்.

Update: 2021-10-19 01:00 GMT

மத்திய பிரதேசத்தில் துர்க்கை சிலை கரைக்கும் ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து ஏற்படுத்தியது.

இந்துக்களில் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று நவராத்திரி விழா. இந்த விழா முடிந்து துர்க்கா சிலைகளை நீரில் கரைப்பது வழக்கம். இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் துர்க்கை சிலைகளை கரைக்கும் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று பக்தர்கள் மீது அதிக வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தசரா பண்டிகையின் போது சத்தீஸ்கர் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Source: Puthiyathalaimurai

Tags:    

Similar News