மதமாற்றும் கும்பலுக்கு 'செக்': மதமாற்ற தடை சட்டத்திற்கு கர்நாடக சட்டப்பேரவை ஒப்புதல்!

மதமாற்றத்திற்கு தடை விதிக்கின்ற வகையில் சட்டத்திருத்தத்தை கர்நாடக சட்டப்பேரவை நேற்று (டிசம்பர் 23) ஒப்புதல் வழங்கியுள்ளது.;

Update: 2021-12-24 03:43 GMT
மதமாற்றும் கும்பலுக்கு செக்: மதமாற்ற தடை சட்டத்திற்கு கர்நாடக சட்டப்பேரவை ஒப்புதல்!

மதமாற்றத்திற்கு தடை விதிக்கின்ற வகையில் சட்டத்திருத்தத்தை கர்நாடக சட்டப்பேரவை நேற்று (டிசம்பர் 23) ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாமில் உள்ள சுவர்ண விதான சவுதாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த 20ம் தேதி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடக மத சுதந்திர பாதுகாப்பு உரிமை சட்டம் 2021 என்கின்ற பெயரில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 21ம் தேதி சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். அதில் அரசு தற்போது கொண்டுவந்திருக்கும் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கான விவாதம் 23ம் தேதி (நேற்று) நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று பேரவையில் மதமாற்ற சட்ட மசோதா மீது விவாதம் நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஆதரவு உறுப்பினர்கள் அதிகமாக குரல் கொடுத்தனர். இதனால் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் கர்நாடகா மாநிலத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News