மத்திய அரசின் அனைத்து துறைகளையும் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்துள்ளோம்: மணிப்பூரில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் திரிபுராவில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.4800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-01-04 12:13 GMT

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் திரிபுராவில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.4800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டினார்.


இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: மணிப்பூர் மாநிலத்தை கடந்த காலங்களில் காங்கிரஸ் புறக்கணித்தது. பிரதமராவதற்கு முன்னர் பல முறை நான் இங்கு வந்துள்ளேன். மக்களின் மனதில் என்ன வேதனைகள் இருக்கிறதோ அதனை அறிந்துள்ளேன். இதனை அறிந்ததால் தான் கடந்த 2014க்கு பின்னர் மத்திய அரசின் அனைத்து துறைகளையும் உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துள்ளேன்.

கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூரில் வெறும் 6 சதவீத மக்களே குழாய் மூலம் தங்களின் வீடுகளில் குடிநீர் பெற்றனர். ஆனால் தற்போதைய நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தின் வாயிலா சுமார் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மக்கள் கொண்டு வந்த நிலையான அரசு அனைத்து சக்திகளையும பயன்படுத்தி மக்களுக்காக பணியாற்றி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source: Dinamalar

Image Courtesy:ANI

Tags:    

Similar News