சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

Update: 2022-01-13 14:38 GMT

இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களின் சொத்து விவரங்களை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்க தவறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய அரசுத்துறை செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி அல்லது ஜனவரி 15ம் தேதிக்குள் தங்களின் அசையா சொத்து விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் அடுத்த நிலை பதவி உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக இதற்கு முன்னர் ஆண்டின் சொத்து விவரங்களை வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Polimer

Image Courtesy: Twiter

Tags:    

Similar News