பிரதமரின் முதன்மை செயலராக தமிழக அதிகாரிகளுக்கு வாய்ப்பு?

Update: 2022-03-06 10:10 GMT

பிரதமர் மோடியின் முதன்மை செயலராக பணியாற்றி வந்த டாக்டர் பி.கே.மிஸ்ராவுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ஓய்வு பெறுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதிலாக மற்றொருவரை இப்பதவியில் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் முதன்மை செயலர் பதவி என்பது மிகவும் வலிமை வாய்ந்தது ஆகும். இந்த பதவியில் இருப்பவர் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருப்பரும் ஆவர். அது மட்டுமின்றி பிரதமர் எடுக்கின்ற முக்கியமான முடிவுகளை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது கட்டாயம்.

இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது முதன்மை செயலர் பதவிக்கு ஒரு அதிகாரியை தேர்ந்தெடுத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் கூறுகின்றது. அதுவும் அந்த அதிகாரி தமிழகத்தை சேர்ந்த டி.வி.சோமநாதன் எனவும் கூறப்படுகிறது. என கூறப்படுகிறது. சோமநாதன் நிதித்துறை செயலராக பணியாற்றி வருகின்றார். இவர் 1987 பேட்ச் அதிகாரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: ABP

Tags:    

Similar News