யு.பி.ஐ பேமெண்ட் வசதியை அறிமுகப்படுத்தும் டாடா - எப்பொழுது அமலுக்கு வருகிறது?
டிஜிட்டல் கட்டண சேவைகளை வழங்கும் யுனைட்டட் பைமெண்ட் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) தொடங்குவதற்கு டாடா குழுமம் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிடம் (என்.பி.சி.ஜ) அனுமதி கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வர்த்தகப் பிரிவான டாடா டிஜிட்டல் அதன் யு.பி.ஐ உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வளர்ச்சிகள் பற்றிய தகவல்கள் ஆதாரங்களின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன டாட்டா டிஜிட்டல் மற்றும் சிறந்த தனியார் கடன் வழங்கும் சேவைகளுடன் கூடுதல் வங்கி பங்குதாரராக துவங்க திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
கூகுள் பே, அமேசான் பே, மற்றும் போன் பே போன்ற வங்கி அல்லாத தளங்கள் பெரிய பரிவர்த்தனை அளவுகளை கையாளுவதற்கான இடத்தை பல வங்கிகளுடன் பகிர்ந்து வருகின்றனர், இந்நிலையில டாடா தற்பொழுது அறிமுகப்படுத்தும் இந்த யு.பி.ஐ சேவையில் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் இதன் மூலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழுமத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் செயலியான TATA Neu'இன் வெளியீடு வரும் ஐபிஎல் 15 வது சீசன் உடன் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.பி.எல்'லில் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.