முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய விவாதங்களை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: முல்லை பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும், மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பாகும்.
மேலும், புதிய தொழில்நுட்ப உறுப்பினர்களை நியமனம் செய்து மேற்பார்வை குழுவை ஏன் மாற்றக்கூடாது. அணை விவகாரத்தில் கேரள அரசு இடையூறு செய்யும் பட்சத்தில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகலாம். இதற்காக உத்தரவுகள் பிறப்பிக்க தயாராக இருக்கிறோம் என்றனர்.
Source: Dinamalar
Image Courtesy: DNA India