இந்தியாவில் தற்போது எத்தனை மின்சார வாகனங்கள் இயங்குகிறது தெரியுமா? மோடி அரசால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
2022 மார்ச் 25ஆம் தேதி வரையில், எத்தனை மின்சார வாகனங்கள் இந்திய சாலையில் ஓடுகின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த எண்ணிக்கைகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
2014இல் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்தது முதல், பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
சுகாதார மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என, அனைத்து திசைகளிலும் நாடு சீரான வளர்ச்சிப் பெற்று வருகிறது.
நாட்டின் அசூர வளர்ச்சி இயற்கை வளங்களை பாதிக்கக்கூடாது என்ற கருத்தில்கொண்டு, மின்சார வாகனங்களில் உற்பத்தியை அதிகரிக்க பா.ஜ.க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அதன் விளைவு பல தனியார் வாகன நிறுவனங்களும் தற்போது அதிக அளவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்யும் வாகனங்களை மக்களும் பெரிதளவு வாங்கி வருகின்றனர்.
"வாஹான் 2.0" இணையதளத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் 25 வரையில், இந்திய நாட்டில் 10,76,420 வாகனங்கள் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்காக 1,700 சார்ஜிங் மையங்கள் இயங்கி வருவதாகவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை மற்றும் இயற்கை மாசுபடுவதை தடுக்கவே அனைவரும் மின்சார வாகனங்களை நோக்கி படையெடுத்து வருவதாக, ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.