குஜராத் ராம நவமி ஊர்வலத்தில் கல், கண்ணாடி பாட்டில் வீசி தாக்கி கலவரம் செய்த 'மர்ம நபர்கள்'

Update: 2022-04-12 10:45 GMT

குஜராத்தின் ஹிம்மத்நகரில் ராம நவமி ஊர்வலத்தை இஸ்லாமிய கும்பல் தாக்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்துக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஒடிசாவில் உள்ள கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஜோடா நகரில், இந்து பக்தர்களால் ராம நவமியின் போது சென்ற அகடா என்ற ஊர்வலம் சில உள்ளூர் இலசாமியா கலவரக்கர்களால் தாக்கப்பட்டதை அடுத்து நிலைமை பதட்டமானது. வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமநவமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அகடா ஊர்வலத்தை நடத்த அந்த பகுதி இந்துக்கள் விருப்பியதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்படும் ராம நவமி சடங்குகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு இந்து கோவில்களிலும் மதக் கொடியை எடுத்துச் செல்ல பக்தர்கள் நிர்வாக அனுமதி கோரினர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அனுமதி மறுத்த காவல்துறை, திங்கள்கிழமை ஊர்வலத்தை முடிக்க குறிப்பிட்ட ஐந்து பேரை மட்டுமே அனுமதித்தது.


ஏப்ரல் 11 ஆம் தேதி, கொடியுடன் பக்தர்கள் வார்டு எண் 4 இல் உள்ள சிவன் கோயிலை அடைந்தபோது, ​​​​இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் சாலையை மறித்து பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் பகுதிக்குள் பக்தர்களை நுழைய அனுமதிக்காத அவர்கள், அவர்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசத் தொடங்கினர், வன்முறை மோதலைத் தூண்டினர், இதன் விளைவாக பலர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று சமாதானம் செய்ய வந்த போலீஸார் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் தாக்கினர். போராட்டக்காரர்கள் கோவில் பகுதியில் உள்ள கடைகளை அடித்து உடைக்க ஆரம்பித்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது. மேலும் சில இருசக்கர வாகனங்களை தீ வைத்து சேதப்படுத்தினர். அப்போது வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இரு சமூகத்தினருக்கும் இடையே 4 மணி நேரத்திற்கும் மேலாக மோதல் நீடித்ததாக கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த எஸ்.பி மித்ரபானு மொஹபத்ரா, சம்புவா துணை ஆட்சியர் பிரதாப் ப்ரிதிமே, பட்பில் எஸ்.டி.பிஓ ஹிமான்ஷு பூஷன் பெஹெரா, பத்பில் தாசில்தார் அலோக் படேல், ஜோடா பிடிஓ ஜெகநாத் ஹனுமான் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்தனர். இதையடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144வது பிரிவின் கீழ் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை காவல் துறையினர் தடை உத்தரவு பிறப்பித்தனர் அதன் பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.


Source - Opindia.com

Tags:    

Similar News