வையகத்திற்கு அன்னமிடும் பாரதம்! இந்திய கோதுமைகளை இறக்குமதி செய்ய எகிப்து அரசு முடிவு!

Update: 2022-04-15 12:51 GMT

இந்தியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய ஏகிப்து அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் போன்ற காரணங்களால் இந்தியாவின் ஏற்றுமதி முந்தைய காலங்களை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக உணவு ஏற்றுமதியில் இந்தியா அசுர வளர்ச்சியை எட்டி வருகிறது.


இதன் வரிசையில், கோதுமையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான எகிப்து நாடு, தற்போது இந்தியாவிலிருந்து  கோதுமையை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.


இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : இந்திய விவசாயிகள் உலகத்திற்கு உணவு வழங்குகின்றனர். எகிப்து அரசாங்கம் இந்தியாவில் இருந்து கோதுமைகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்துவிட்டது. உலகிற்கு உணவு வழங்கும் அளவுக்கு நம் விவசாயிகள் தானியங்களை உற்பத்தி செய்துள்ளனர்.

என்று பதிவிட்டுள்ளார்.


இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியா பொருளாதாரத்தின் பொற்காலத்தை நோக்கி அடி எடுத்து வைக்க தொடங்கிவிட்டது.


Swaraja

Similar News