ஜஹாங்கிர்பூரி கலவரம் - குற்றவாளியை விசாரிக்க சென்ற காவல்துறையினரை மூர்க்கமாக தாக்கிய "மர்ம நபர்கள்"

Update: 2022-04-19 04:38 GMT

டெல்லி: ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு தொடர்புடைய குற்றவாளிகளின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற டெல்லி காவல்துறையினரை, குற்றவாளிகளின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.


டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இரு தரப்பினருக்கு இடையே மோதல் மூண்டது. மோதலைத் தடுக்க முயன்ற காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். ஜஹாங்கீர்பூரி மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலும் வன்முறை வெடித்தது.


கல்வீச்சு சம்பவங்களும், வாகனங்களை தீயிடும் சம்பவமும் நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.


இதனிடையே போலீஸ் உயர் அதிகாரிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  "கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கட்டளையிட்டுள்ளார்.


"அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று இக்கலவரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கூறியுள்ளார்.


இந்த பதட்டமான சூழ்நிலையில், காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு விசாரிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக குற்றவாளியாக கருதப்படும் "முகமது சோனு சின்கா" என்பவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது சின்காவின் உறவினர்கள், விசாரிக்க வந்த காவல் துறையினரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.


இச்சம்பவம் டெல்லி வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Opindia

Tags:    

Similar News