தென் மாவட்டங்களில் மதமாற்றம் அதிகரிப்பு: தமிழக அரசு மீது ஆளுநர் ரிப்போர்ட்!
தமிழகத்தில் பட்டினப் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி சைலன்டாக சில காரியத்தை முடித்திருப்பதாக டெல்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு ஆளுநர் ஒரு ரகசியமான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளாராம்.
அதுவும் தமிழகத்தில் மதம் சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது. அதனை மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அறிக்கையில், தருமபுரம் ஆதீனத்திற்கு நடந்ததை குறிப்பிட்ட அவர், பல்வேறு கோயில்களுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு பல்வேறு சமய தலைவர்களையும் சந்திந்துள்ளேன். அவர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அதிலும் தி.மு.க. அரசு இந்து மத தலைவர்களையும் அவர்களின் சம்பிரதாயங்களையும் மதிப்பதில்லை. அதிலும் தேவையின்றி அரசு தலையிடுவதாக பல இந்து தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி தென்மாவட்டங்களில் கட்டாய மதமாற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்ததில்லை. மேலும், தலைமைச் செயலரிடம் கூறியுள்ளேன். ஆனால் அவரும் இதுவரை எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் தி.மு.க. அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்கலாம் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar