"மசூதி நிலம் எங்களுடையது" - சூடுபிடிக்கும் கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு

Update: 2022-05-21 08:57 GMT

மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள மசூதியை அகற்ற வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு பின்னணி பற்றி பார்ப்போம். கடந்த 2020ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட உடனே மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்து விட்டது கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம். அயோத்தியை தொடர்ந்து காசியிலும், மதுராவிலும் கோயில்கள் மீட்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் ஒலிக்கத்தொடங்கியது.

இது தொடர்பாக அப்போது அகில இந்திய சாதுக்கள் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 2021ம் ஆண்டில் மாநிலங்களவையில் பா.ஜ.க. இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தது. 1947ல் இருந்து வழிப்பாட்டு தலங்களில் எந்த மாறுதல்களையும் செய்யக்கூடாது என்ற சட்டத்திற்கு எதிராக அன்று குரல் கொடுத்தது பா.ஜ.க. அன்றே கிளப்பட்ட சர்ச்சை தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

தற்போது மதுரா, காசியில் கோயில்கள் மசூதிகள் அடுத்தடுத்து இருப்பதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் கோயிலின் ஒரு பகுதியை இஸ்லாமியர்கள் கைப்பற்றியிருப்பதை காட்டுவதாக வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொந்தமான 13.3 ஏக்கர் இடத்தை உடனடியாக மீட்டுத்தரக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு 6 பேர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று தள்ளுபடி செய்தது. ஆனால் இதனை ஏற்காத மனுதாரர்கள் மாவட்ட நீதிமன்றத்தை அணுகினர். அதன்படி வழக்கை விசாரிப்பதாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசராணை செய்து முடித்து வைக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Source: Thanthi Tv

Image Courtesy: India Legal

Tags:    

Similar News