ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
மேலும், காங்கிரஸ், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, தி.மு.க. உட்பட 17 எதிர்க்கட்சிகள் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது. அவர் தனது வேட்புமனுவை கடந்த ஜூன் 27ம் தேதி தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மொத்தம் உள்ள நான்கு செட் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். முதல் செட் வேட்புமனுவில் காங்கிரஸ் கட்சியும், இரண்டாவது வேட்பு மனுவில் தி.முஉக.வும், மூன்றாவது வேட்புமனுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் நான்காவது செட் வேட்புமனுவில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு மத்தியில் ஒரு செட்டில்கூட சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக யாரும் முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை. வேட்புமனு தாக்கலின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடன் இருந்தும் கையெழுத்துப்போடவில்லை. மேலும், சிவசேனா கட்சி சார்பாக யாருமே பங்கேற்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த வேட்புமனு தாக்கலை பார்க்கும்போது ஒற்றுமை இல்லை என்பதையே காட்டுகிறது.
Source, Image Courtesy: Dinamalar