"பக்ரித் பண்டிகையின்போது போது பசுக்களை பலியிட வேண்டாம்" - இஸ்லாமியர்களுக்கு முக்கிய இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்!

Update: 2022-07-05 02:25 GMT

அஸ்ஸாம்: "எதிர்வரும் பக்ரீத் பண்டிகையின் போது பசுக்களை பலியிட வேண்டாம்." என முக்கிய இஸ்லாமிய அமைப்பான இத்-உஸ்-ஜூஹா தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை 10.07.2022 அன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடபடயிருக்கிறது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தின்  'இத்-உஸ்-ஜூஹா' என்ற இஸ்லாமிய அமைப்பின் மாநிலத் தலைவர் பட்ருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிக்கையில் " இந்து மத சனாதன தர்மத்தில், பசுமாட்டை அவர்கள்( இந்துக்கள்) 'தாய்' போன்று வழிபட்டு வருகிறார்கள். ஆகையால் அவர்களது மத உணர்வுகளை நாம் புண்படுத்தக் கூடாது."

மேலும் அவர் " கடந்த 2008ஆம் ஆண்டு Islamic seminary Darul Uloom Deoband என்ற அமைப்பு, பசுக்களை குர்பானியின் ஒரு பகுதியாக பலியிட  வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது."

மேலும் அஜ்மல் " இத்-உஸ்-ஜுஹாவின் போது ஒட்டகம், ஆடு, மாடு,எருமை மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகளை பலியிடலாம்' என்று கூறினார்.


முக்கிய இஸ்லாமிய அமைப்பின் இத்தகைய  அறிக்கை, நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Swarajya

Tags:    

Similar News