காளி கோயிலாக மாறிய திரிபுரா போர் நினைவிடம் - என்ன நிலவரம்?

Update: 2022-07-05 09:54 GMT

ஸ்ரீநகர் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் எல்லை பகுதியில் போர் நினைவிடமாக காளி கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு வங்காள ரெஜிமென்ட் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் உதவியால் வங்கதேசம் என்கின்ற தனி தேசம் உருவான வரலாறு உண்டு. அப்போது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, பி.எஸ்.எப்., என்று சொல்லப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் கமாண்டராக இருந்த மேஜர் பி.கே.கோஷ், பார்டர்மேன் என்ற பி.எஸ்.எப்., படையின் பத்திரிகையில் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் அவர் கூறியதாவது: அப்போதைய கிழக்கு பாகிஸ்தானை ஒட்டியுள்ள திரிபுராவின் ஸ்ரீநகர் பகுதி மிகவும் முக்கியம் வாய்ந்தவை ஆகும். இங்கு எல்லை பாதுகாப்புப் படையின் முகாம் உள்ளது. இதுதான் அப்போது பாகிஸ்தான் ராணுவத்தை தடுத்து நிறுத்தியது. ஸ்ரீநகரில் இருக்கும் நமது படையின் நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்கி வந்தது. பிரசிசன் டார்க்கெட் என்று சொல்லப்படும் முக்கிய இலக்காக அப்பகுதி அமைந்திருந்தது. ஸ்ரீநகரில் இருக்கும் பதுங்குக் குழியில் ஒரு கிறிஸ்துவர், மேற்கு வங்க இஸ்லாமியர், மற்றும் இந்து வீரர் இருந்தனர். அவர்களை வெளியில் வரவேண்டாம் என்று தகவல் அனுப்பியிருந்தோம்.

அந்த சமயத்தில் இந்துக் கடவுளான காளியை வேண்டிக் கொள்ளும்படி மற்ற இரண்டு வீரருக்கும் இந்து வீரர் கூறினார். மாற்று மதங்களை சேர்ந்தவராக இருந்தபோதிலும் அவர்களும் வேண்டிக் கொண்டனர். இந்நிலையில், அந்த இடத்தில் போர் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்போது போர் காளி கோயில் கட்டும்படி, படையில் இருந்த கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் வீரர்கள் கூறினர். அதற்கான நிதி திரட்டப்பட்டு அங்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் காளி கோயில் சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News