வரலாறு காணாத திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை - எத்தனை கோடி தெரியுமா?

Update: 2022-07-24 12:38 GMT

திருமலை, திருப்பதியில் சமீப நாட்களாக உண்டியலில் வசூல் செய்யப்படும் காணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக வருவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப உண்டியல் வருமானமும் பல மடங்கு பெருகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் காணிக்கை ரூ.128 கோடி, ஏப்ரல் ரூ.127.5 கோடி, மே 129.93 கோடி, ஜூன் ரூ.120 கோடி, ஜூலை ரூ.106 கோடி 40 லட்சம் காணிக்கையாக வந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டில் மொத்தம் ஆண்டு முடிவதற்குள் ஆண்டு வரவாகும் காணிக்கை மட்டும் ரூ.1,500 கோடியை எட்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News