பா.ஜ.க'வை ஆதரித்த இஸ்லாமிய பெண்ணுக்கு முத்தலாக் கொடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்!
உத்தரப் பிரதேசம்: தேர்தலில் இஸ்லாமிய பெண் ஒருவர், பா.ஜ.க'விற்கு வாக்களித்ததால் அப்பெண்ணை அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் சித்திரவதை செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர் 'ஷெனாயிராம்' என்ற இஸ்லாமிய பெண். இவர் 2019 டிசம்பரில் 'முஹம்மது நதீம்' என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
உத்திரபிரதேசத்தில் நடந்த தேர்தலின் போது, ஷெனாயிராம் கணவனின் கட்டளையை மீறி பா.ஜ.க'விற்கு வாக்களித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் ஷெனாயிராமை கொடுமைப்படுத்தியுள்ளனர்.இறுதியாக நதீம் ஷெனாயிராமை நோக்கி முத்தலாக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மார்ச் 3ஆம் தேதி காவல்நிலையத்தில் ஷெனாயிராம் புகார் அளித்துள்ளார்.
ஷெனாயிராமின் புகாரை ஏற்ற உள்ளூர் காவல்துறையினர், நதீம் மீது F.I.R பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்போதுதான் காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்நிலையில் நதீம் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.