"அநீதிகளை எதிர்த்துப் போராட நமது மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி உத்வேகம் அளிக்கட்டும்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்!

Update: 2022-08-19 14:08 GMT

இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மலையாள இந்துக்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறினார்.


இன்று கிருஷ்ண ஜெயந்தியை உலகம் முழுவதிலும் இருக்கும் இந்துக்களும் கிருஷ்ண பக்தர்கள் சிறப்பாக  கொண்டாடி வருகின்றனர். நாட்டின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் வாழ்த்துக் கூறினார்.

அவர் கூறியதாவது "நமது மக்கள் ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தை அதர்மத்திற்கு எதிராக தர்மத்தை மீட்டெடுக்கும் அடையாளமாக பார்க்கின்றனர். இது இறக்கம் மற்றும் அக்கறையின் சின்னமாகும்.

இந்த கிருஷ்ண ஜெயந்தி நாள் சமூகம் முழுவதும் அன்பு மற்றும் ஒளியைப் பரப்பும் செய்தியை உறுதி செய்யப்படும். அனைத்து வகையான அநீதிகளையும் எதிர்த்துப் போராட நமது மக்களுக்கு இது உத்வேகம் அளிக்கட்டும்."

என்று விஜயன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறினார்.


இடதுசாரி கொள்கையை மீறி தனது மக்களுக்காக வாழ்த்துக்களை கூறிய பினராய் விஜயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்,  மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து செய்திகள்  கூறி, இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து செய்திகள்  கூறாமல் ஆட்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Dinamalar

Tags:    

Similar News