இந்தியாவில் அரிசி ஏற்றுமதி தடை.. உலக நாடுகளில் காத்துக் கொண்டிருக்கும் மக்கள்..

Update: 2023-07-31 02:28 GMT

எதிர்பாராத பருவகால மாற்றங்களால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.


இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, மற்றும் பொது வினியோகத்திற்கான அமைச்சகம், ஜூலை 20 அன்று 'பாஸ்மதி அல்லாத அரிசி' ஏற்றுமதிக்கு தடைவிதித்தது.


இந்தியாவின் இந்த ஒரு அறிவிப்பு காரணமாக உலக நாடுகள் தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ அரிசி மட்டுமே விற்பனை செய்யக்கூடிய நிலை உலக நாடுகளின் சில்லறை விற்பனை நிலையங்களில் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் அரிசி ஏற்றுமதியின் தடையை நீக்க வேண்டும் என்று IMF தரப்பிலிருந்தும் தற்போது கோரிக்கை ஒன்று முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News