என் மண் என் தேசம் இயக்கம்.. பிரதமர் மோடி அரசாங்கத்தால் எடுக்கப்படும் மிகப்பெரிய நடவடிக்கை..

Update: 2023-08-05 05:41 GMT

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தனது மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் வானொலி உரையின்போது 'மேரி மாத்தி மேரா தேஷ்' எனப்படும் என் மண் என் தேசம் இயக்கத்தை அறிவித்தார். இந்த இயக்கம் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறும். நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவு பலகைகள் கிராம பஞ்சாயத்துகளில் நிறுவப்படும். தகவல் ஒலிபரப்புத் துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலைத் தெரிவித்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அபூர்வா சந்திரா, சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இந்த என் மண் என் தேசம் இயக்கம் இருக்கும் என்று கூறினார். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நாடு தழுவிய இயக்கமான இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டும் இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் நடைபெறும் என்று அவர் கூறினார். இந்த இயக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், ஊடகங்களின் பங்கு குறித்தும் தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் எடுத்துரைத்தார்.


லாச்சாரத் துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் பேசுகையில், நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மண்ணை 7500 கலசங்களில் கொண்டு செல்லும் 'அம்ரித் கலச யாத்திரை' நடத்தப்படுவதைக் குறிப்பிட்டார். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உறுதிப்பாட்டைக் குறிக்கும் என்றும் அவர் மேலும் விளக்கினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News