வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிப்பதில் பெரும் பங்கு வகித்தது என்று மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வீடியோ செய்தி மூலம் திரு மோடி தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற மகத்தானவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். காந்தியடிகளின் தலைமையின் கீழ், காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதில் இந்த இயக்கம் பெரும் பங்கு வகித்தது. இன்று இந்தியா ஒருமித்த குரலில் எழுப்புகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.
அது மட்டும் கிடையாது, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பது ஊழலே இந்தியாவை விட்டு வெளியேறு, வாரிசு அரசியலே இந்தியாவை விட்டு வெளியேறு, திருப்திப்படுத்தும் மனப்பாங்கே இந்தியாவை விட்டு வெளியேறு என்று சூட்சகமாகவும் தற்போது இந்தியாவில் நடக்கும் அரசியலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு ட்விட்டர் பதிவில் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News