ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு காட்சி சுவர்.. புதிய மாற்றத்தை கொண்டு வரும் மத்திய அரசு..
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு பெருமை இருக்கிறது. அவற்றை வெளிக்கொண்டு வரும் விதமாக குறிப்பாக சுற்றுலா துறையின் முக்கிய நோக்கமாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு மக்களும் தங்கள் இடத்தில இருந்து மற்றொரு பகுதிக்கு சுற்றுலாவருக்காக செல்லும் பொழுது அவர்கள் இத்தகைய பொருட்களை அனுபவிப்பதற்காக ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்பது தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ஓடிஓபி) மற்றும் தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நேற்று 'ஓடிஓபி சுவர்' (ODOP Wall) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தின. இதை அறிமுகப்படுத்திப் பேசிய மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக வாழ்வாதாரத் துறை கூடுதல் செயலாளர் சரண்ஜித் சிங், இந்திய கைவினைப் பொருட்களின் தனித்துவத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான மற்றொரு நடவடிக்கை இது என்றார்.
வர்த்தகம் அமைச்சகத்தின் கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் (டிபிஐஐடி) கீழ் செயல்படுத்தப்படும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) திட்டம், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி பொருட்களின் விற்பனையை அதிகரித்து சீரான வளர்ச்சியை ஊக்குவித்து நாட்டையும் மக்களையும் தன்னிறைவு அடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Input & Image courtesy: News