சுதந்திர தினத்தில் இல்லங்களில் பறக்கும் தேசியக்கொடிகள்.. மாஸ் காட்டிய மோடி அரசு..
இல்லந்தோறும் மூவர்ணக் கொடி பிரச்சாரத்தின் கீழ் புதுதில்லியில் தமது இல்லத்தின் உச்சியில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அதனுடன் எடுத்துக் கொண்ட சுய புகைப்படத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார். சுதந்திர தினத்திற்கு முன் வானத்தில் கோடிக்கணக்கான தேசியக்கொடிகள் பறப்பது, இந்தியாவை மீண்டும் மகத்துவத்தின் முன்னுதாரணமாக மாற்றுவதற்கான தேசத்தின் கூட்டு விருப்பத்தை அடையாளப் படுத்துகிறது என்று ட்விட்டர் பதிவு மூலம், அமித் ஷா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் இல்லந்தோறும் தேசியக்கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, http://harghartiranga.com என்ற இணையதளத்தில் சுய புகைப்படங்களைப் பதிவிடுமாறும், பிறரையும் ஊக்கப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில், தில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாக அமித் ஷா கூறினார். இல்லந்தோறும் மூவர்ணக் கொடி பிரச்சாரத்தில் கலந்து கொண்டதற்காக பெறப்பட்ட சான்றிதழையும் உள்துறை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
Input & Image courtesy: News