மத்திய கிழக்கு போர் பதற்றம்!! பிரதமர் மோடி தலைவர்களுடன் ஆலோசனை!!
பிரதமர் மோடி மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக பிரான்ஸ், மலேசியா, ஓமன், ஜோர்டான் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் கேள்விக்குறியாகி உள்ளது.
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபர், குவைத் பட்டத்து இளவரசர், பிரான்ஸ் அதிபர், மலேசிய பிரதமர், ஓமன் சுல்தான், ஜோர்டான் மன்னர் உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு பதற்றத்தை தணிக்க வேண்டும், போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இஸ்ரேல், ஈரான் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினால் போரை நிறுத்த முடியும் என்று இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக முன்னாள் தூதர் ஹசன் மிர்ஸா தெரிவித்தார்.