அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் மீதான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, உலவ எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெயுடன், அக்வா டைட்டன் என்ற சரக்கு கப்பல் மங்களூரு துறைமுகம் வந்துள்ளது.
இந்த கப்பல் முதலில் சீனாவுக்கு சென்று கொண்டிருந்தது. இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக அமெரிக்கா இந்தியாவுக்கு 30 நாட்கள் விலக்கு அளித்ததை தொடர்ந்து இந்தியா நோக்கி திசை திருப்பப்பட்டது. ரஷ்ய கச்சா எண்ணெயுடன் சுமார் 7 சரக்கு கப்பல்கள் இந்தியா நோக்கி பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பல்கள் விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து எல்பிஜி உடன் Pyxis Pioneer சரக்கு கப்பல் மங்களூரு துறைமுகத்துக்கு வந்திருந்தது. குஜராத் மாநிலத்துக்கு எல்பிஜி உடன் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி உள்ளிட்ட சரக்கு கப்பல்கள் வந்திருந்தன.