அன்பு, அமைதி இது தான் இந்தியா-பங்களாதேஷ் விருப்பம்: பங்களாதேஷில் பிரதமர் உரை.!

Update: 2021-03-28 11:27 GMT

உறுதியற்ற தன்மை, பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மைக்கு பதிலாக இந்தியாவும் பங்களாதேஷும் அன்பு மற்றும் அமைதியை விரும்புகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பங்களாதேஷிற்கு சென்றுள்ள நிலையில், நேற்று கோபால்கஞ்சின் ஒரகண்டியில் உள்ள ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்த பின்னர் மாதுவா சமூக மக்களிடையே உரையாற்றினார். இது மாதுவா சமூகத்தின் ஆன்மீக குருவான ஹரிச்சந்த் தாக்கூரின் பிறப்பிடமாகும்.


 நேற்று அங்கு மோடி பேசுகையில், "இந்தியாவும் பங்களாதேஷும் தங்கள் சொந்த வளர்ச்சியின் மூலம் உலகம் முன்னேறுவதைக் காண விரும்புகின்றன. இரு நாடுகளும் உறுதியற்ற தன்மை, பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மைக்கு பதிலாக அன்பு மற்றும் அமைதியை இந்த உலகத்தில் காண விரும்புகின்றன. கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​இந்தியாவும் பங்களாதேஷும் தங்கள் திறன்களை நிரூபித்தன. இரு நாடுகளும் இந்த தொற்றுநோயை வலுவாக எதிர்கொண்டு அதை ஒன்றாக எதிர்த்துப் போராடுகின்றன. மேட் இன் இந்தியா தடுப்பூசி பங்களாதேஷ் குடிமக்களையும் சென்றடையா வேண்டும் என்ற கடமையை கருத்தில் கொண்டு இந்தியா செயல்படுகிறது" எனக் கூறினார்.



 மேலும் பேசிய பிரதமர், இந்த வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக காத்திருப்பதாகவும், தனது 2015 பங்களாதேஷ் பயணத்தின்போதே, ​​ஒரகண்டியைப் பார்வையிட விருப்பம் தெரிவித்ததாகவும், அது இப்போது தான் நிறைவேறியுள்ளது என்றும் கூறினார். ஒரகண்டி இந்து மாதுவா சமூகத்தின் புனித தளங்களில் ஒன்றாகும். இந்த மாதுவா சமூகத்தில் பெரும்பாலோனோர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, மேலும் ஒரகண்டிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்ள மாதுவா சமூக உறுப்பினர்கள் உணர்ந்த அதே உணர்ச்சிகளை தானும் உணர்வதாகத் தெரிவித்தார். கொரோனாவிற்கு பின்னர் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News