இந்தியாவுக்கே உதாரணமாக விளங்கும் கோவா பொது சிவில் சட்டம்: புகழாரம் சூட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

Update: 2021-03-30 11:20 GMT

இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கோவாவில் செயல்பட்டு வரும் பொது சிவில் சட்ட அமைப்பைப் பாராட்டினார். அரசியலமைப்பு வடிவமைப்பாளர்களால் திட்டமிடப்பட்ட சீரான பொது சிவில் சட்டத்தை கோவா பின்பற்றி வருகிறது என்று கூறினார். இந்தியாவில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும், சிவில் சட்டங்களைப் பொறுத்தவரை முஸ்லீம் சமுதாயத்திற்கு மட்டும்,எ அவர்களின் மத வழக்கப்படியிலான ஷரியா சட்டம் நடைமுறையில் உள்ளது.


இந்த ஷரியா சட்டத்தின் கீழ், முஸ்லீம்களுக்கிடையே எழும் வழக்குகளை விசாரித்து தீர்வு காண தனி ஷரியா நீதிமன்றங்களும் இயங்குகின்றன,. இதை நிர்வகிக்கும் பணியை அகில இந்திய தனிநபர் முஸ்லீம் சட்ட வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தால் வேறுபட்டிருந்தாலும், அடிப்படையில் ஒரே கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்பதால் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன.


 தற்போது மத்தியில் பா.ஜ.க ஆட்சி நிலவும் சூழலில், ஆர்ட்டிகிள் 370, ராமர் கோவில் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததை போல், பொது சிவில் சட்டமும் விரைவில் கொண்டுவரப்படும் எனும் எதிர்பார்ப்பு மக்களிடையே சமீப காலமாக எழுந்துள்ளது. எனினும் அரசு தரப்பிலிருந்து இது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் இந்தியாவில் பொது சிவில் சட்டம் நீண்ட காலமாக அமலில் உள்ள ஒரே மாநிலமான கோவாவில், கடந்த சனிக்கிழமையன்று கோவாவில் புதிய உயர்நீதிமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கே மிகச் சிறந்த உதாரணம் எனத் தெரிவித்துள்ளார். "பொது சிவில் சட்டம் மூலம் கோவா அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவிற்கு முன்னோடியாக உள்ளனர். அந்த சட்டத்தின் கீழ் நீதியை நிர்வகிக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இது திருமணம் மற்றும் வாரிசுரிமை உள்ளிட்ட அனைத்தையும், ஒருவரின் மதத்திற்கு அப்பாற்பட்டு பொதுவாக நிர்வகிக்கிறது" என்று தலைமை நீதிபதி போப்டே அப்போது கூறினார்.

Similar News