"ஹிந்து ராஷ்டிரம் அமைந்தாலும் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்"- கேரள கிறிஸ்தவர்கள் கூறியதன் பின்னணி என்ன?
வாரத்துக்கு ஒரு இந்துப் பெண் என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட போதும் லவ் ஜிகாத் என்ற ஒன்றே இல்லை என்று இடதுசாரி ஆதரவாளர்கள் அழுத்தந்திருத்தமாக கூறி வருகின்றனர். கேரள மாநிலம் இடதுசாரி ஆதரவாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அங்கு லவ் ஜிஹாத் உண்மை என்றும் அதை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரே கட்சி பாஜக என்பதால் அதற்கு ஓட்டளிக்க உள்ளதாகவும் வாக்காளர்கள் தெரிவித்துள்ளது தேர்தல் களத்தின் உண்மை நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இந்து பெண் ஒருவர் அதியா என்று பெயரை மாற்றிக்கொண்டு இஸ்லாமிய மதத்தை தழுவி இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டது உச்சநீதிமன்றம் வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான் முதன்முதலில் லவ் ஜிகாத் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது இன்று பெண்களே என்ற போதும் கேரளாவில் திருச்சபைகளும் பாதிரியார்களுமே லவ் ஜிகாத் நடப்பது உண்மை என்று கூறும் அளவுக்கு கிறிஸ்தவ பெண்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இந்தப் பிரச்சினை இந்த தேர்தலில் கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கும் விஷயமாக மாறியிருக்கிறது. இதுபற்றி India Ahead News என்ற இணைய செய்தி தளத்தில் வெளியான செய்தியில் இருந்து தங்களது பெண்களை லவ் ஜிகாத்தில் இருந்து பாதுகாக்க கிறிஸ்தவர்கள் பாஜக வுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
காலங்காலமாக காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் வாக்களித்து வந்தவர்கள் கூட ஆர்எஸ்எஸின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு தான் எங்களது வாக்கு என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. கேரளா முஸ்லிம்கள் தங்கள் மீது அதிகாரம் செலுத்த முனைவதாகவும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகவும் கேரள கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.