எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்திய-சீன ராணுவங்கள் விவாதம்!

Update: 2021-04-11 10:52 GMT

கிழக்கு லடாக்கில் உள்ள பல்வேறு புள்ளிகளில் இருந்து படைவீரர்களை விலக்குவது குறித்து இந்திய மற்றும் சீன இராணுவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை 13 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. நேற்றுமுன்தினம் காலை 10.30 மணிக்கு தொடங்கிய உரையாடல் இரவு 11.30 மணிக்கு முடிந்தது. ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் 900 சதுர கி.மீ டெப்சாங் சமவெளி போன்ற மோதல் அதிகமுள்ள பகுதிகளில் படைகளை விலக்குவது செய்வது குறித்து அவர்கள் விவாதித்தனர்.


சுஷூலில் கார்ப்ஸ் கமாண்டர் பேச்சுவார்த்தையின் 11 வது சுற்று, கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு நடந்துள்ளது. இந்திய இராணுவக் குழுவுக்கு லேவை தளமாகக் கொண்ட 14 கார்ப்ஸின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் P.G.K.மேனன் தலைமை தாங்கினார். பேச்சின் கவனம் மற்ற மோதல் புள்ளிகளிகளில் இருந்தும் படைகளை விலக்குவதாகும். பாங்கோங் ஏரியில் படைவிலகல் செய்யப்பட்ட பின்னர், இரு நாடுகளும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் டெப்சாங் போன்ற பிற மோதல் புள்ளிகளில் படைவிலகல் செய்ய திட்டமிட்டுள்ளன.


"இராணுவ உரையாடல் இன்னும் தொடர்கிறது, கோடைகால விரிவாக்கம் தொடங்குவதற்கு முன்னர் எல்லையில் படை விலகல் நடைபெறுவது முக்கியம். இரு தரப்பினரும் விஷயங்களை எளிதாக்குவதற்கு அசல் நிலைகளுக்கு பின்வாங்க வேண்டும்" என்று ஒரு மூத்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். முன்னதாக பிப்ரவரி 20 அன்று, இந்திய மற்றும் சீன இராணுவம் எல்லையில் பதற்றத்தை குறைக்க 10 வது சுற்று இராணுவ உரையாடலை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுவரை, பாங்காங் ஏரியின் இரு கரைகளிலும் படை விலகல் செயல்முறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Similar News