ஒரே மாதத்திற்குள் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும்: SII அதிரடி அறிவிப்பு!

Update: 2021-05-31 12:07 GMT

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா(SII) இன்னும் ஒரே மாதத்தில் குறிப்பாக ஜூன் மாதத்தில் 9 முதல் 10 கோடி டோஸ் கோவிஷீல்ட் தயாரித்து வழங்க முடியும் என்று அரசுக்கு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்  தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மாநிலங்களின் புகாருக்கு மத்தியில் SII நிறுவனத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், SII அதன் ஊழியர்கள் தொற்றுநோயால் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கால நேரம் இல்லாமல் முழுமையாக பணியாற்றி வருவதாகக் கூறினார்.


மே மாதத்தில் எங்கள் உற்பத்தி திறன் 6.5 கோடி டோஸுடன் ஒப்பிடும்போது, ​​ஜூன் மாதத்தில் எங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை 9 முதல் 10 கோடி அளவுகளை நாட்டிற்கு உற்பத்தி செய்து வழங்க முடியும் என்பதை தெரிவிப்பதில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று SIIயின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகார இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் தனது கடிதத்தில் கூறினார்.

கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பல்வேறு கட்டங்களில் அமித் ஷா அளித்த மதிப்புமிக்க வழிகாட்டுதலுக்கும், தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றியும் பிரகாஷ் குமார் சிங் தெரிவித்தார்.


"சீரம் இன்ஸ்டிடியூட் ஆப்(SII) இந்தியா எப்போதுமே கொரோனாவிலிருந்து நமது நாட்டின் மற்றும் உலகின் குடிமக்களின் பாதுகாப்பைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளது. எங்கள் CEO ஆன ஆதார் பூனவல்லாவின் தலைமையில், எங்கள் குழு அரசுடன் இணைந்து இடைவிடாமல் செயல்படுகிறது" என்று அவர் மேலும் கடிதத்தில் கூறி உள்ளார்.

கோவிஷீல்ட் உற்பத்தி ஜூன் மாதத்தில் 6.5 கோடி, ஜூலை மாதத்தில் 7 கோடி மற்றும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா 10 கோடி வரை அதிகரிக்கும் என்று SII மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதைவிட அதிகமாகவே உற்பத்தி செய்வதாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News