தடைகளை கடந்து சரித்திரம் படைத்த இந்தியா : தடுப்பூசி வெற்றிப் பயணத்தின் தொகுப்பு!
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்
உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக மக்களை பெருமளவில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு எதிராக, பல்வேறு நாடுகள் தங்களுடைய சொந்த தடுப்பூசிகளை கண்டுபிடித்து மக்களுக்கு பாதுகாப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து வந்தது. இத்தகைய செயல்களில் குறிப்பாக வளர்ந்த நாடுகள் தங்களுக்கு மட்டும்தான் பல்வேறு சலுகைகள் வழங்கின. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வளர்கின்ற நாடுகளால் தங்கள் அளவிற்கு இந்த நோய் தொற்றை எதிர் கொள்ள முடியாது என்றும் கூறிக் கொண்டு வந்தனர். அத்தகைய நிலைமையை முற்றிலும் முறியடிக்கும் விதமாக இந்தியா பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது, தடுப்பூசி போடத் தொடங்கிய 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்தியா நிறைவு செய்தது.
குறிப்பாக நோய்த் தொற்றை கையாளுவதில் இது மிகப்பெரிய பயணமாக இந்தியாவிற்கு இருந்தது. இதில் ஒவ்வொரு தனி மனிதனின் உழைப்பும் அடங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்தது? என்பதை நாம் நினைவுகூரும் போது, 100 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதகுலம் இத்தகைய தொற்றுநோயைச் சமாளித்துள்ளதும் இப்படிப்பட்ட வைரஸ் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது என்பது நிதர்சன உண்மை தான். ஒரு அறியப்படாத மற்றும் கண்ணுக்குத் தெரியாத எதிரியே இந்தியா தற்போது சிறிது சிறிதாக வீழ்த்தி வருகின்றது என்பது பாராட்டத்தக்கது தான். இதற்கு முற்றிலும் கைகொடுத்தது தடுப்பூசி இயக்கம் தான். அரசாங்கத்தின் முயற்சியினாலும் மக்கள் மீது அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக நமது தேசம் தற்போது தடுப்பூசி இயக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது.
இந்த தடுப்பூசி இயக்கத்தில் குறிப்பாக இந்திய மக்கள் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று உணர்வுடன், சமூகத்தின் பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு உண்மையான பகீரத முயற்சியாகும். இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மக்களுக்கு அதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. குறிப்பாக COWIN வலைதளம் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலைகளிலும் வாழும் மக்களுக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கும் தடுப்பூசி சென்று சேர வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அது மக்களுக்கு சேர்ப்பதிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்சாரத்தின் வெற்றிக்கு ஒரு காரணம், தடுப்பூசி மீது மக்கள் உருவாக்கிய நம்பிக்கை. அவநம்பிக்கை மற்றும் பீதியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் நடந்தபோதிலும், மக்களின் நம்பிக்கை இறுதியாக வெற்றி பெற்றுள்ளது.