சிப் தொழிற்சாலை அமைக்க மாநில அரசிடம் 1000 ஏக்கர் நிலம் கேட்கும் வேதாந்தா!

Update: 2022-04-29 14:26 GMT

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைப்பதற்காக சுமார் 1000 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு மாநில அரசுகளிடம் வேதாந்தா நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான இருந்த செமி கண்டக்டர் சிப்களின் சந்தை மதிப்பு 2026ம் ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மார்க்கெட் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து சிப் தயாரிக்கும் தொழில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. எனவே அதற்காக குறிப்பிட்ட மாநிலங்களில் நிலம் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அரசுகளுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் 1000 ஏக்கர் நிலம் இலவாசாக குத்தகைக்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவைகளும் குறைந்த அளவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Source: Polimer

Image Courtesy: Mint

Tags:    

Similar News