டிக்கெட் இல்லாமல் பயணம்: ரயில்வேக்கு குவிந்த ரூ.1,017 கோடி: ஆர்.டி.ஐ. மூலம் தகவல்!

Update: 2022-02-21 12:06 GMT

நடப்பு நிதியாண்டில் ஒன்பது மாதங்களாக ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 1.78 கோடி பேரிடம் இருந்து ரூ.1,017 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் கவுர், சமூக ஆர்வலராக உள்ளார். சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள் பற்றிய விவரங்களை கேட்டுள்ளார். அவருக்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், கொரோனா வைரஸ் தொற்று இல்லாத 2019, 2020ம் நிதியாண்டில் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 1.10 கோடி பேரிடம் 561.73 கோடி ரூபாயாக அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அமலுக்கு வந்த 2020, 2021ம் நிதியாண்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டது. இதன் காரணமாக டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் 27.57 லட்சம் பேராக இருந்தனர். அவர்களிடம் இருந்து 143.82 கோடி ரூபாய் பணம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த டிசர்பர் வரையில் டிக்கெட் இல்லாமலும் கூடுதலாக லக்கேஜ் எடுத்து சென்ற 1.78 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மட்டும் ரூ.1,017 கோடி ரூபாய் அபராதமாக பெறப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: News 18

Tags:    

Similar News