இந்தியாவில் 109 கோடி செலவில் 80 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை உருவாக்கும் கூகுள்!

Update: 2021-06-18 10:34 GMT

கடந்த ஏப்ரல் மாதம் கூகுள் நிறுவனம் இந்திய மக்களின் பொது சுகாதார பிரச்சாரம் மற்றும் அவசர நிவாரணத்திற்கு ஆதரவு வழங்கும் விதமாக 135 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய மக்களின் சுகாதார உள்கட்டமைப்பை  உயர்த்தும் வகையில், சுகாதார வசதி தேவைப்படும் இடங்களில் மற்றும் கிராமப்புற இடங்களில் 109 கோடி ரூபாய் செலவில் 80 ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கொரோனா காலத்தில் பல மக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்க கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்த  புதிய உறுதிப்பாட்டை கூகுள் நிறுவனம் லாப நோக்கற்ற அமைப்புகளான "GiveIndia,PATH " ஆகிய அமைப்புகளிடம் வழங்க உள்ளது. 


இது குறித்து கூகுள் நிறுவனம் கூறும்போது "Google.org மூலம் இந்தியாவில் சுகாதார வசதி இல்லாத இடங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 80 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க 109 கோடி ரூபாயை லாபம் நோக்கற்ற அமைப்புகளான GiveIndia மற்றும் PATH  அமைப்புகளிடம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை கூகுள் நிறுவனம் வழங்கும்" என்று கூகுள் கூறியது.

Tags:    

Similar News