'வீடு தோறும் மூவர்ணக்கொடி' கொண்டாடும் வகையில் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசிக்கொடி!

Update: 2022-07-27 09:19 GMT

'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' விழாவை கொண்டாடும் வகையில் இந்தோ, திபெத் பாதுகாப்பு படையினர் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றி ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்கின்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. இதன் நோக்கம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் மற்றும் அதன் மக்கள், கலாசாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும், நினைவுகூறுவதற்கும் ஒரு முன் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

அதற்காக மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் வருகின்ற ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் 'வீடு தோறும் மூவர்ணக்கொடி' என்கின்ற பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இதனை நாடு முழுவதும் கொண்டு செல்ல அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில், லடாக்கில் இந்தோ, திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் நமது மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடியுள்ளனர். அதன் பின்னர் ஒவ்வொரு குடிமகனும் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று ராணுவ வீரர்கள் கூறினர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News