கிளினிக்கில் பணிபுரியும் ஊழியரை மதம் மாற வற்புறுத்தும் டாக்டர் ஃபாருக் கமல்! உத்திரப் பிரதேச காவல் துறை வழக்குப் பதிவு
உத்திரப் பிரதேசம்: ஃபாருக் அப்துல்லா என்ற மருத்துவர் தன் கிளினிக்கில் பணிபுரியும் ராம்ராஜ் யாதவ் என்ற இளைஞரை மதமாற்ற வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இந்து மக்களை குறிவைத்து மாற்று மதத்தினர் கட்டாய மத மாற்றத்திற்கு வற்புறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. "இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பல இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் 'ராம்ராஜ் யாதவ்' என்ற இளைஞன் தனியார் மருத்துவ கிளினிக்கில் பணியாற்றி வந்துள்ளார்.
இவரை 2019'இல் அக் கிளினிக்கின் மருத்துவர் டாக்டர் ஃபாருக் கமல், அந்த இளைஞனை குர்ஆனை எடுத்து படிக்க வற்புறுத்தி வருவதாகவும், மேலும் ராம்ராஜ் யாதவ் என்ற பெயரை 'கரம் ஹுசைன்' என்று ஆதார் கார்டில் மாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இதை எதிர்த்து ராம்ராஜ் யாதவ் பல அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் அதற்கு பலன் எட்டவில்லை.
இந்நிலையில் சித்தார்த்த நகர் காவல் நிலையத்தில், ராம்ராஜ் யாதவ் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் ஃபாருக் கமல் மீது சட்டவிரோத மதமாற்றத் தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.