மேற்கு வங்காளத்தில் 175 பா.ஜ.க தொண்டர்கள் கொலை! பா.ஜ.க MP க்கள் தர்ணா போராட்டம்!

Update: 2021-07-21 12:50 GMT

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மம்தா பானெர்ஜி முதல்வராக பொறுப்பேற்றார். மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தல் சமயத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து தேர்தல் முடிந்த பிறகும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் ஈடுபட்டு, பா.ஜ.க கட்சியை சேர்ந்த தொண்டர்களை தாக்கினர் மேலும் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். 


இந்த நிலையில் இன்று பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள ராஜகாட்டில் மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பா.ஜ.க வை சேர்ந்த அனைத்து எம்.பி களும் கலந்து கொண்டு (Persecuted Citizens, Endangered Democracy) என்ற பதாகைகளை கையில் ஏந்தி மேற்கு வங்காள அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதே போல் மேற்கு வங்காளம் முழுவதும் 'save westbengal- save democracy' என்ற தலைப்பில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த பலர் மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த போராட்டம் குறித்து பா.ஜ.க வை சேர்ந்த திலிப் கோஷ் கூறுகையில் "மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த 175 தொண்டர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். அந்த வன்முறையில் இறந்த எங்கள் கட்சியின் தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாங்கள் இன்று டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்று அவர் கூறினார்.  

Tags:    

Similar News