மத்திய அரசு துரித நடவடிக்கை..!கருப்பு பூஞ்சைக்குக் கூடுதலாக 19,420 ஆம்போடெரிசின் B மாநிலங்களுக்கு ஒதுக்கீடு.!

Update: 2021-05-25 09:09 GMT

தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் B மருந்தைக் கூடுதலாக 19,420 குப்பிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரம் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது.


"கூடுதலாக 19,420 குப்பிகள் ஆம்போடெரிசின் B மருந்தை மத்திய நிறுவனம் இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளது. இது தவிர மே 21 இல் நாடுமுழுவதும் ஆம்போடெரிசின் B மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது," என்று மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் DV சதானந்த கௌடா ட்விட்டில் தெரிவித்திருந்தார்.

பொதுவாகக் கருப்பு பூஞ்சை என்பது, மண், செடி, உரம் மற்றும் அழுகிய பழம் மற்றும் காய்கறிகளில் வெளிப்படும் சளி அச்சு வெளிப்படுவதால் ஏற்படும் ஒரு பூஞ்சை ஆகும். மேலும் தற்போது இந்த கருப்பு பூஞ்சைக்கு எதிராக ஆம்போடெரிசின் B மருந்து பயன்படுத்தப்படுகின்றது.

தொற்றுநோய் சட்டம் 1897 கீழ் தற்போது இந்த கருப்பு பூஞ்சையைத் தொற்று நோயாக அறிவிக்க மாநிலங்களுக்கு மத்திய அமைச்சகம் மே 20 இல் அறிவித்தது. IDSP க்கு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்துத் தெரிவிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.


நாட்டில் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்கள் கருப்பு பூஞ்சையைத் தொற்று நோயாக அறிவித்துள்ளது.

Tags:    

Similar News