இளைஞர்களையே அதிகம் தாக்கும் கொரோனா 2வது அலை : மாநில கட்டுப்பாட்டு அறை தகவல்.!

Update: 2021-05-24 02:00 GMT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது கொரோனாவின் 2வது அலையால் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தகைய பாதிப்புகளுக்கு மத்தியில், உத்தரகண்ட் மாநில கட்டுப்பாட்டு அறை ஒரு அதிர்ச்சியான முடிவுகள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் தான். ஆனால் தற்போதைய கொரோனா 2வது அலை முதியவர்களை விட இளையவர்களை அதிகம் பாதிக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் தற்பொழுது சுட்டிக்காட்டியுள்ளது. 


கொரோனாவின் இரண்டாவது அலை, இளையோருக்கு தொற்று ஏற்படுவதாகத் தோன்றும் வேகமாக பரவுகின்ற மாறுபாடுகளுடன் முதல் அலையை விட மிகவும் அழிவுகரமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 30 வயதிலிருந்து நாற்பது வயதினரை தாக்கும் தொற்றுநோய் அதிகமான இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் ஆய்வு முடிவு கூறுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் காட்டுகிறது.


எனவே நோய் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயம் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளவும். மேலும் பொதுமக்கள் அனைவரும் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையில் பல்வேறு வயதினரின் சதவீத பங்களிப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன என்பதையும் உத்தரகண்ட் மாநில கட்டுப்பாட்டு அறை புள்ளி விவரங்கள் மேலும் சுட்டிக்காட்டுகிறது. இதனால் இளைஞர்களும், குழந்தைகளும் கூட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News