திருப்பதி: 2 மாதங்களில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்ய அனுமதி!
இரண்டு மாதங்களில் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு திருப்பதி திருமலையில் பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களில் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு திருப்பதி திருமலையில் பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக, புதுச்சேரிக்கான தேவஸ்தான ஆலோசனை குழு நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நேற்று (ஜனவரி 6) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 24 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ஒருவர் ஆவார்.
அவர்கள் அனைவருக்கும் தமிழக திருப்பதி தேவஸ்தான தலைவர் ராஜசேகர் ரெட்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது: கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. தற்போது அனைத்து பக்தர்களின் வேண்டுதலால் கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது. எனவே இரண்டு மாதங்களில் திருப்பதி திருமலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar