காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு விதிமீறல்! 20 நிமிடம் காண்வாயுடன் நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு!
பஞ்சாபில் போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால், பிரதமர் நரேந்திர மோடி 20 நிமிடம் மேம்பாலத்தில் பாதுகாப்பு காண்வாயுடன் நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை பிரதமர் பஞ்சாப் மாநிலம் பதிந்தாவிலிருந்து, தேசிய தியாகிகள் நினைவிடம் இருக்கும் ஹுசைண்வாலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார். மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக செல்ல பிரதமரின் பயண திட்டம் மாற்றப்பட்டது.
பிரதமரின் காண்வாய், மேம்பாலம் ஒன்றில் செல்லும்பொழுது அந்தப் பாலத்தை திடீரென்று போராட்டக்கார கும்பல் அடைத்து விட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அடுத்த 20 நிமிடம் வரை பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தில் நிற்கும் நிலை உருவானது.
"பிரதமரின் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது பஞ்சாப் மாநில அரசுக்கு முன்னமே தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித பாதுகாப்பும் பிரதமர் செல்லும் வழியில் ஏற்படுத்தியதாக தெரியவில்லை, இந்த பாதுகாப்பு மீறல் குறித்து பஞ்சாப் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.