பாஜகவிற்கு வாக்களித்தவர்களை குறி வைத்து தாக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் - மேற்குவங்க மக்கள் 2000 பேர் பாதுகாப்பு கேட்டு அசாமில் தஞ்சம்

Update: 2021-05-07 01:00 GMT

மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் அண்டை மாநிலமான அசாமில் 2000 பேர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் துஃபன்கஞ்ச் தொகுதிக்குட்பட்ட ஜவுகுதி கிராமத்தைச் சேந்தவர் 40 வயதாகும் மேகு தாஸ்.இவருடைய தாயார் கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று காலை மேகு தாஸை ஒரு கும்பல் தேடி வந்துள்ளது. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் என்றும் தான் பாஜகவுக்கு வாக்களித்ததால் என்னை தேடி வந்து தாக்கியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் அவர்கள் பிடியில் சிக்காமல் அருகாமையில் உள்ள அசாமின் துப்ரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இவர் தற்போது மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்துள்ள இடத்தில் அகதியாக வசித்து வருவதாகவும் அவர் வசிக்குமிடத்தில் மட்டும் தன்னை போல 250 பேர் இருப்பதாகவும் கூறுகிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியான மே 2ம் தேதியில் இருந்து மேற்குவங்கத்தின் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக தொண்டர்களை அடித்து, காயப்படுத்தி வருவதாக பரவலாக சொல்லப்படுகிறது.

மாநில அரசிடம் வன்முறை சம்பவங்கள் குறித்து ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேல்மட்ட தலைவர்கள் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக மேற்குவங்கம் சென்றுள்ளனர்.


Similar News