சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023.. இந்தியாவில் முதல்முறையாக ஏற்பாடு செய்த மோடி அரசு..
பிரதமர் நரேந்திர மோடி 23 செப்டம்பர் 2023 இன்று காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023-ஐ தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 இந்திய பார் கவுன்சிலால் 'நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்' என்ற தலைப்பில் 2023 செப்டம்பர் 23 முதல் 24-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்ட தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக செயல்படுவதையும், யோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதையும், சட்ட பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிதலை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் சட்ட நடைமுறைகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய சட்டத்துறை வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.
புதிய இந்தியாவில் இத்தகைய சர்வதேச அளவிலான வழக்கறிஞர்கள் மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை என்றும் மாநாட்டின் வாயிலாக அடுத்தடுத்த ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதற்கான ஒரு சிறு செயலை தான் முடிய அரசாங்கம் தற்போது முன்வைத்து இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News