உலக உணவு இந்தியா 2023.. துவங்கி வைத்த பிரதமர் மோடி.. இதன் சிறப்பு என்ன தெரியுமா..
உலக உணவு இந்தியா 2023- கண்காட்சியை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு 'உலக உணவு இந்தியா 2023' இரண்டாவது பதிப்பு எனும் மிகப்பெரிய உணவுக் கண்காட்சி நிகழ்வினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்ப கட்ட மூலதன உதவியை பிரதமர் வழங்கவுள்ளார். மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் தரமான உற்பத்தி மூலம் சுய உதவிக் குழுக்கள் சந்தையில் சிறந்த விலையைப் பெற இந்த ஆதரவு உதவும். உலக உணவு இந்தியா 2023 கண்காட்சியின் ஒரு பகுதியாக உணவு தெரு அரங்குகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இதில் பிராந்திய உணவு வகைகள் மற்றும் அரச சமையல் பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெறும், இதில் 200 க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் பங்கேற்று பாரம்பரிய இந்திய உணவுகளை வழங்குவார்கள், இது ஒரு தனித்துவமான சமையல் அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வு இந்தியாவை 'உலகின் உணவு கூடை' என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அரசாங்க அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விவாதங்களில் ஈடுபடவும், கூட்டாண்மைகளை நிறுவவும், வேளாண் உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஒரு கட்டமைப்பு மற்றும் வணிக தளத்தை வழங்கும். முதலீடு மற்றும் எளிதாக தொழில் தொடங்குவதை மையமாகக் கொண்டு தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேஜை மாநாடுகள் நடைபெறும்.
இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையின் கண்டுபிடிப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்படும். நிதி மேம்பாடு, தர உத்தரவாதம் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் கண்டு பிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உணவுப் பதப்படுத்தும் தொழிலின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 48 அமர்வுகள் இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றன.
Input & Image courtesy: News