தமிழர்களுக்காக கட்டப்பட்ட நகரத்தார் நிலம் ஆக்கிரமிப்பு: 24 மணி நேரத்தில் மீட்ட யோகி ஆதித்யநாத்!

Update: 2022-05-18 13:55 GMT

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் 240 கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை 24 மணி நேரத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீட்டுக்கொடுத்துள்ளது. வாரணாசி நகரத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினருக்கு சொந்தமான சத்திரம் அமைந்துள்ளது. அதாவது காசி விஸ்வநாதர் கோயில் பூஜைகளுக்கு தேவையான பூக்கள் வளர்ப்பதற்காகவும், கங்கை கரையில் சுமார் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நந்தவனத்தையும், நகரத்தார் அறக்கட்டளை அமைத்திருக்கிறது.

இந்த நிலம் 1813ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிலத்தை சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து தமிழர்கள் அளித்த புகாரில் கடந்த 24 மணி நேரத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு அதிரடியாக நிலத்தை மீட்டுக் கொடுத்துள்ளது.

இது குறித்து நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர மேலாண்மை கமிட்டி நிர்வாகி முத்துக்குமார் கூறும்போது, வாரணாசிக்கு வருகின்ற தமிழக பக்தர்கள் தங்குவதற்காக சத்திரம் மற்றும் காசி விஸ்ஸநாதர் கோயில் அபிஷேகத்திற்கு பசும்பால் வழங்கவும், பசு மடம், கோயிலுக்கு பூக்கள் வழங்கப்படுவதற்கு நந்தவனம் உள்ளிட்டவைகள் நகரத்தார் சமூகம் நடத்தி வருகிறது. தற்போதைய சந்தை மதிப்பு ரூ.240 கோடி வரும். இந்த நிலத்தை சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கிருஷ்ணமோகன் முன்னா மற்றும் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் ஆக்கிரமித்து அதனை திருமணம் மண்டபமாக நடத்தி வந்தனர். அவர்கள் உள்ளூரிலேயே மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக வலம் வந்தனர். இதனால் எங்களால் நந்தவனத்தை மீட்க முடியவில்லை.

இதற்கிடையில் நந்தவனத்தை மீட்கும் பொறுப்பை தங்களிடம் வழங்கிய பின்னர் நாங்கள் அரசியல் தலைவர்களிடம் புகார் கொடுத்தோம். அதன் பின்னர் வாரணாசி மாநகர போலீஸ் கமிஷ்னர் சதீஷ் கணேஷிடம் புகார் கொடுத்தோம். இதனையடுத்து அவர்கள் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் நந்தவனத்தை மீட்டு கொடுத்தனர். இதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு நேரில சந்தித்து நன்றியை தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News