ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் சம்பவங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது! சாத்தியமான பின்னணி!

Update: 2021-03-30 01:30 GMT

2021-ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் சம்பவங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக 2020-ஆம் ஆண்டில் 167 காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்தில் இணைந்தனர். இந்த ஆண்டு தற்போது வரை 20 பேர் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

மத்திய பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை ஜம்மு - காஷ்மீரில் 43 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் 2020-ல் 58 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 6 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது இளைஞர்கள் மாயமானதாக கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் சில நாள்களில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பிவிட்டதாகவும், இந்த ஆண்டில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 20 இளைஞர்களில் 8 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். அடையாளம் காணப்படாத சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News