ஒலிம்பிக் இந்திய வீரர்கள் கோவிஷீல்டு இரண்டாம் டோஸை 28 நாட்களில் போட்டுக் கொள்ளலாம் - அதிரடி முடிவு!

Update: 2021-06-28 12:19 GMT

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அடுத்த மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளி விட்டு செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசாங்கம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு வருகிறது. அதேபோல் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும் மற்றும் அங்கு பணிபுரிய செல்லும் ஊழியர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள 84 நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த நிலையில் இரண்டாம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளி குறித்த வழக்கை  உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு பிரமாண பாத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியதாவது "ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை 28 நாட்கள் இடைவெளிவிட்டு செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News