இத்தனை சதவீதம் தடுப்பூசி போட்டால் தான் 3வது அலை கொரோனாவை சமாளிக்க முடியும்!

Update: 2021-07-02 12:51 GMT

தற்பொழுது இந்தியாவில் கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையின் பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த தொற்று நோயின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வருகிறது. ஆனால் முன்பைவிட தற்போது மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகவே காணப்படுகிறது. எனவே இதிலிருந்து மீண்டு வருவதற்கும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவது என்பது ஒரே நோக்கமாகும். 


கொரோனா 3வது அலையை சமாளிக்க கேரளா மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 85% மக்களுக்காவது தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் இதுபற்றி கூறுகையில்,  "கேரளாவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் நடந்து வருவதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 


மேலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் தகவல்களை 24 மணிநேரத்தில் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. கேரளாவில் இறப்பு விகிதம் 0.4% ஆக உள்ளது. கொரோனா தொற்றின் 3வது அலையை சமாளிக்க குறைந்தபட்சம் 85% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையில் உள்ளன என்று அவர் கூறினார். எனவே அதிகரித்து வரும் தொற்று நோயின் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் சுமார் 85% தடுப்பூசி செலுத்தினால் மட்டும் தான் மூன்றாவது 3வது அலை கொரோனாவை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 


Similar News